ஆப்கான் தொடர்பாக டெல்லியில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம்...சீனா, பாகிஸ்தானையும் அழைத்துள்ளதாக தகவல்

0 4286

ஆப்கான் நிலவரம் தொடர்பாகத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டத்தை அடுத்த மாதத்தில் இந்தியா நடத்த உள்ளதாகவும், அதற்குப் பாகிஸ்தானையும் அழைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நவம்பர் 10, 11 ஆகிய நாட்களில் டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க ரஷ்யா, தஜிக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, மாஸ்கோவில் அக்டோபர் 20ஆம் நாள் நடைபெற உள்ள கூட்டத்தில் இந்திய, ஆப்கானிஸ்தான் பிரதிநிதிகள் சந்தித்துப் பேச உள்ளனர். அதே நேரத்தில் டெல்லியில் நடைபெற உள்ள கூட்டத்துக்கு ஆப்கான் பிரதிநிதிக்கு அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments