"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சாம்பியன்
தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
மாலத்தீவில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா, நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதியின் 49-வது நிமிடத்தில் இந்தியா கேப்டன் சுனில் சேத்ரியும், 50-வது நிமிடத்தில் சுரேஷ் சிங், இறுதி நிமிடத்தில் ஷஹல் அப்துல் சமத் ஆகியோர் அடுத்தடுத்து கோல் திருப்பினர். இறுதியில் 3-க்கு 0 என்ற கோல் கணக்கில் வென்று இந்திய அணி 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பறியது.
49-வது நிமிடத்தில் கோல் அடித்ததன் மூலம் கேப்டன் சுனில் சேத்ரியின் சர்வதேச கோல் எண்ணிக்கை 80-ஆக உயர்ந்து. இதன் மூலம் சர்வதேச கால்பந்தில் அதிக கோல் அடித்த வீரர்களில் அர்ஜெண்டினாவின் மெஸ்சியை சமன் செய்தார்.
Comments