ஜம்மு காஷ்மீர் அரசுப் பணியில் இருந்து கீலானியின் மகன் அல்தாப் டிஸ்மிஸ் - தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு!
ஜம்மு காஷ்மீரின் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கீலானியின் மகன் அல்தாப் ஃபந்தூஷ் அரசுப் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
அவர் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்படுவதாக அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டையடுத்து அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அணிஸ் அல் இஸ்லாம் என்றழைக்கப்படும் அல்தாப் ஃபந்தூஷ் கடந்த 2016 ஆம் ஆண்டில் ஆய்வு அதிகாரியாக அரசுப் பணியில் சேர்ந்தார்.
Comments