கனமழை பெய்வதால் இன்றும் நாளையும் பக்தர்கள் சபரிமலைக்கு வர வேண்டாம்... தேவசம் போர்டு வேண்டுகோள்!

0 2474

கனமழை காரணமாக, இன்றும் நாளையும் பக்தர்கள் சபரிமலைக்கு வர வேண்டாம் என்று ஆலயத்தின் தேவசம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.

கேரள மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வரும் நிலையில் சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தனமிட்டா மாவட்டத்திலும் கன மழை பெய்கிறது. பம்பா நதியில் வெள்ளம் அபாயக் கட்டத்தை நெருங்கி வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் பக்தர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்குக் கோவிலுக்கு வருவதைத் தவிர்க்குமாறு சபரிமலை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments