3 முதல் 11 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த உத்தரவு ; ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திய சிறுவர்கள்
அர்ஜெண்டினாவில், 3 வயதிற்கு மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அர்ஜெண்டினாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதை தொடர்ந்து கொரோனா பரவல் கணிசமாகக் குறைந்தது.
இதையடுத்து, 3 வயது முதல் 11 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தில் வசிக்கும் சிறுவர், சிறுமியர்களுக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை மருத்துவப் பணியாளர்கள் செலுத்தினர்.
Comments