முன்னோர் எழுதிக் கொடுத்த நிலத்தை தங்களுக்கே விற்க வேண்டும் எனத் தகராறு செய்தவர்கள் கைது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே முன்னோர் எழுதிக் கொடுத்த நிலத்தை மீண்டும் தங்களுக்கே விற்க வேண்டும் எனக் கூறி, நில அளவைப் பணியைத் தடுத்து தகராறு செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கல்குறிச்சி கிராமத்திற்கு அருகே தனியார் மருத்துவமனைக்குச் சொந்தமான சுமார் 40 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தின் சில பகுதிகள், கல்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சிலரால் பல ஆண்டுகளுக்கு முன் எழுதிக் கொடுக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது.
நிலத்தை தனியார் மருத்துவமனை நிர்வாகம் விற்க முயன்ற நிலையில், நிலத்தை எழுதிக் கொடுத்தவர்களின் வாரிசுதாரர்கள் அதனை தங்களுக்கே விற்க வேண்டும் எனக் கேட்டுள்ளனர். விவகாரம் நீதிமன்றம் சென்று, மருத்துவமனை தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.
இதனையடுத்து, நிலத்தை அளவீடு செய்ய வருவாய்த்துறையினர் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த எதிர்தரப்பினர், நில அளவையைத் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண்கள் சிலர் தீக்குளிக்க முயன்றனர். சிலர் சாமி வந்தவர் போல் ஆடினர்.
Comments