சீனாவில் எந்திரம் மூலம் பருத்தி அறுவடை செய்யும் பணிகள் தொடக்கம்.. விவசாயிகள் மகிழ்ச்சி
சீனாவில் எந்திரம் மூலம் பருத்தி அறுவடை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.
சின்சியாங் (Xinjiang) மாகாணத்தில் 62 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி விவசாயம் நடைபெற்று வருகிறது. கடும் குளிரால் 15 நாட்கள் தாமதமாக அறுவடை பணிகள் தொடங்கிய போதும், நவீன எந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் வழக்கத்தை விட வேகமாக அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.
100 பேர் நாள் முழுதும் செய்யும் வேலையை இந்த எந்திரம் ஒரு மணி நேரத்தில் செய்து முடிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். உலகின் ஒட்டு மொத்த பருத்தி உற்பத்தியில் 20 சதவீதம் சின்சியாங் (Xinjiang) மாகாணத்தில் அறுவடை செய்யப்படுகிறது.
Comments