பிட் காயின் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களின் மின் தேவைக்கு புதுபிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்த எல் சால்வடார் திட்டம்
பிட் காயின் வர்த்தகத்தை அனுமதித்துள்ள எல் சால்வடார் நாடு , பிட் காயின் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களின் மின் தேவைக்கு புதுபிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுத்து சேகரித்து வைப்பதை போல கிரிப்டோகரன்ஸிகளை சேகரித்து வைக்க மைனிங் என்றழைக்கப்படும் செயல்முறை கம்ப்யூட்டர்கள் மூலம் செய்யப்படுகிறது.
இந்த கம்பியூட்டர்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துவதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சென்ற மாதம் பிட் காயின் மைனிங்-குக்காக புவி வெப்பம் மூலம் வரும் ஆற்றலை பயன்படுத்தி தயாராகும் 102 மெகா வாட் மின் உற்பத்தி நிலையத்தை எல் சால்வடார் அரசு தொடங்கியது.
Comments