ரஷ்யாவில் அதிகரித்து வரும் கோவிட் இறப்பு.. முதன் முறையாக ஒரே நாளில் ஆயிரத்தை கடந்தது

0 3549
ரஷ்யாவில் முதன் முறையாக ஒரே நாளில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

ரஷ்யாவில் முதன் முறையாக ஒரே நாளில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை  ஆயிரத்தை கடந்துள்ளது.

ரஷ்ய அரசின் அதிகார்பூர்வ தகவலின் படி 24 மணி நேரத்தில் ஆயிரத்து 2 பேர் உயிரிழந்ததுடன் புதிதாக 33 ஆயிரத்து 208 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

ரஷ்யாவில் இதுவரை 31 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரொனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில்,  தொடர்ந்து 3-ஆவது நாளாக கொரோனா தொற்று எண்ணிக்கை மற்றும் இறப்பு என்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஐரோப்பாவை பொருத்தவரை அதிகப்படியாக ரஷ்யாவில் 2 லட்சத்து 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments