ஐசிஐசிஐ வங்கியில் போலி காசோலையைக் கொடுத்து மோசடி,5 பேர் கொண்ட கும்பல் கைது

0 2208

கோயம்புத்தூரில் ஐசிஐசிஐ வங்கியில் போலி காசோலையைக் கொடுத்து ஒரு கோடி ரூபாயை மோசடி செய்ய முயன்ற 5 பேர் போலீசில் சிக்கியுள்ளனர்.

கோயம்புத்தூர் - திருச்சி சாலையில் இயங்கி வரும் ஐசிஐசிஐ வங்கிக் கிளைக்கு 3 நாட்களுக்கு முன் இரண்டு பேர் டிப்டாப்பாகச் சென்றனர். டெல்லியில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனத்தின் பெயரில் 1 கோடியே 34 லட்சத்து 23 ஆயிரத்து 482 ரூபாய்க்கான காசோலையை கொடுத்து பணம் எடுக்க முயன்றுள்ளனர்.

அது பெரிய தொகை என்பதாலும், அவர்களின் நடவடிக்கையிலும் சந்தேகம் இருந்ததால், அல்ட்ரா பரிசோதனை கருவி மூலம் காசோலையை வங்கி மேலாளர் பரிசோதித்தார்.

அதில் அந்தக் காசோலை போலியானது என்பது தெரியவந்தது. தகவலறிந்து வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார், அந்த இருவரோடு சேர்த்து, 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments