தொடர்மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ; கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

0 2331
தொடர்மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து நொடிக்கு 14 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து 10 நாட்களாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மூன்று அணைகளிலும் இருந்து நொடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தாமிரபரணி ஆற்றங் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments