பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தல்.. குண்டூரில் சம்பவம்

0 2821
ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கடத்திச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கடத்திச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

குண்டூர் அரசு மருத்துவமனையில் பிரியங்கா என்ற பெண்ணுக்கு கடந்த அக்டோபர் 13 ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. நேற்று இரவில் பாட்டியின் அருகே படுக்க வைக்கப்பட்டிருந்த குழந்தையை காலையில் காணவில்லை.

இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சிசிடிவியை சோதனையிட்ட போது, மருத்துவமனையில் ஒரு ஆண் மற்றும் பெண் சந்தேகத்திற்கிடமாக சுற்றிவந்ததும், அந்த ஆண் கட்டைப்பையுடன் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பச்சிளம் குழந்தையை கடத்திச் சென்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments