ரயில் எஞ்சின்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு வந்த போது திடீரென பயங்கர சத்தத்துடன் தடம் புரண்டு விபத்து..

0 3775
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலையம் அருகே பராமரிப்பு பணிமனைக்கு யார்டு வழியாக சென்ற இரண்டு ரயில் எஞ்சின்கள் தடம் புரண்டு விபத்திற்குள்ளாகின.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலையம் அருகே பராமரிப்பு பணிமனைக்கு யார்டு வழியாக சென்ற இரண்டு ரயில் எஞ்சின்கள் தடம் புரண்டு விபத்திற்குள்ளாகின.

இரண்டு ரயில் எஞ்சின்கள் ஒன்றாக  இணைக்கப்பட்டு வந்த நிலையில் எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் தண்டவாளத்தை விட்டு சக்கரங்கள் கீழே இறங்கின.

இந்த விபத்தால்  மற்ற ரயில்களின் போக்குவரத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ரயில்வே ஊழியர்கள் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர். தகவலறிந்து வந்த ரயில்வே அதிகாரிகள் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments