நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை பெய்யக் கூடும் - வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கன மழையும், கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கன மழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். நாளை கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும். அக்டோபர் 18 அன்று வடக்கு உள் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மிதமான மழையும், அக்டோபர் 19 அன்று தென் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த இருநாட்களில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும். இன்றும் நாளையும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments