ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் சிந்தியபடி சசிகலா மரியாதை

0 4041

ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய சசிகலா, ஐந்தாண்டுக்காலத்தில் மனத்தில் தேக்கி வைத்திருந்த பாரத்தை இறக்கி வைத்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர்ச் சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனைக் காலம் முடிந்து பிப்ரவரியில் சிறையில் இருந்து வெளிவந்தார். அப்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்த அவர், ஜெயலலிதா நினைவிடத்தில் பணிகள் நடைபெற்று வந்ததால் அங்குச் செல்லவில்லை. இன்று தனது ஆதரவாளர்களுடன் சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

எம்ஜிஆர், அண்ணா நினைவிடங்களிலும் சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தனது மனத்தில் இருந்த பாரத்தை இறக்கி வைத்துவிட்டதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments