தர்மபுரியில் தங்க நகைகளுக்காக 3 குழந்தைகளின் தாய் கழுத்தை நெரித்து கொலை!

0 4476

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தங்க நகைகளுக்காக 3 குழந்தைகளின் தாயை கொலை செய்த கூலி தொழிலாளி கைது செய்யப்பட்டான். நார்த்தம்பட்டியைச் சேர்ந்த ரவி-தேன்மொழி தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் தேன்மொழிக்கும் பாகல்பட்டியைச் சேர்ந்த அவருடன் பணிபுரிந்த அசோகன் என்பவனுக்கும் இடையே முறையற்ற உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 26ந்தேதி தேன்மொழி ஐயப்பன்கரடு என்ற இடத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்தது.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் அசோகனை கைது செய்து நகைகளை மீட்டனர். கடன் பிரச்னையில் இருந்து தப்பிக்க தேன்மொழியிடம் திருமண ஆசை காட்டி அழைத்து சென்று தூக்க மாத்திரை கலந்த குளிர்பானத்தை கொடுத்து கழுத்தை நெரித்து அசோகன் கொலை செய்தது தெரிய வந்தது.

 

 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments