ஆப்கானிஸ்தான் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு!

0 2423

ஆப்கானிஸ்தான் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

காந்தகார் நகரில் உள்ள ஷியா பிரிவு மசூதியில் ஏராளமானோர் தொழுகை நடத்தியபோது, அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில் 41 பேர் உயிரிழந்ததுடன், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து டெலகிராம் வாயிலாக ஐஎஸ் அமைப்பினர் விடுத்த செய்திக் குறிப்பில், மசூதியில் முதல் தற்கொலைப் படைத் தாக்குதல் மசூதியின் மண்டபத்திலும், 2வது தற்கொலைப் படைத் தாக்குதல் மசூதியின் மையப்பகுதியில் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த வார வெள்ளிக்கிழமையன்று குந்தூஸ் நகரில் ஷியா பிரிவு மசூதி மீது ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 50 பேர் உயிரிழந்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments