சத்தீஸ்கரில் தசரா விழாவின் கூட்டத்தில் அதிவேகத்தில் வந்த கார் புகுந்து விபத்து..! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

0 3011

சத்தீஸ்கரில் பக்தர்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. ஜஷ்பூர் மாவட்டத்தின் பாடல்கான் பகுதியில் தசரா விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது அதிவேகமாக வந்த கார் கூட்டத்தில் புகுந்தது. இதனால் பக்தர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை மோசமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. காருக்குள் இருந்த 2 பேரை பிடித்து அடித்து உதைத்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். காருக்குள் இருந்த கஞ்சாவையும் மக்களே தீ வைத்து எரித்தனர்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments