ஐ.பி.எல். கிரிக்கெட்: 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சென்னை அணி

0 6922

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்று 4-வது முறையாக சென்னை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் பாப் டு பிளஸ்சிஸ் 86 ரன்கள் குவித்தார்.

இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி முதல் 10 ஓவர்களில் 88 ரன்கள் சேர்த்து நல்ல நிலையில் இருந்தது. 11-வது ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஷர்துல் தாக்கூர் ஆட்டத்தை சென்னை அணி பக்கம் கொண்டு வந்தார்.

தொடர் விக்கெட் வீழ்ச்சியை சந்தித்த கொல்கத்தா அணி 20-வது ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்து தோல்வியை தழுவியது. கோப்பையை வென்ற சென்னை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments