’வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது’ கடிதம் எழுதி வைத்துவிட்டு, விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட தம்பதி

0 3020

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தத்தெடுத்து வளர்த்த மகன், மதுவுக்கும், கஞ்சாவுக்கும் அடிமையாகி கொடுமைபடுத்தியதால், கணவன் - மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயியான ராமசாமி - மாரியம்மாள் தம்பதி இருவரும் குழந்தை இல்லாததால் 21 வருடங்களுக்கு முன் அஜித்குமார் என்பவரை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

3 வருடங்களுக்கு முன் மதுவுக்கும், கஞ்சாவுக்கும் அடிமையான அஜீத்குமார், போதையில் தாய், தந்தையிடம் தகராறு செய்தும், சொத்துக்களை எழுதி வைக்கக் கூறியும் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

2 நாட்களுக்கு முன் இதேபோன்று அஜீத்குமார் தகராறு செய்யவே, மனமுடைந்து காணப்பட்ட தம்பதி தங்கள் மரணத்திற்கு மகன் தான் காரணம் எனவும், சொத்துக்களை அவனுக்கு எழுதி வைக்கக் கூடாது என கடிதம் எழுதி வைத்துவிட்டு, தோட்டத்தில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments