தமிழகத்தில் அனைத்து கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி

0 2773

கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் அனைத்து கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அறிவிக்கப்பட்டதை அடுத்து, விஜயதசமி நாளான இன்று தமிழகத்திலுள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்தும், தனிநபர் இடைவெளியை பின்பற்றியும் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

பக்தர்கள் பூ, பழம், மாலை உள்ளிட்ட பூஜை பொருட்களை கோயில்களுக்குள் எடுத்து செல்லவோ, அர்ச்சனை செய்யவோ அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments