பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனத்திற்கு, இனி அரசு ஒப்பந்தங்கள் வழங்கப்படாது - அமைச்சர் சேகர்பாபு

0 3519
பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனத்திற்கு, இனி அரசு ஒப்பந்தங்கள் வழங்கப்படாது

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசை மாற்று குடியிருப்புகளை தரமற்று கட்டிக் கொடுத்த பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனத்திற்கு, இனி எந்த அரசு ஒப்பந்தங்களும் வழங்கப்படமாட்டாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

விஜயதசமியை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் குடும்பத்தினருடன் வழிபாடு நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை மறு சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்பு தான் மக்கள் குடியமர்த்தபடுவார்கள் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கோவில்களுக்கு வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், கோவில்களில் குடமுழுக்கு நடத்த அனுமதிப்பது குறித்து விரைவில் முதலமைச்சர் உத்தரவு பிறப்பிப்பார் எனவும் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments