காந்தி தேசத்தில் போதைப்பொருட்களை அனுமதிக்க முடியாது : ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது வாதம்
மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் சுதந்திரத்திற்காக போராடிய நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை அனுமதிக்க முடியாது என ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் வாதிட்டனர்.
போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை மும்பை நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த விசாரணையில் வாதிட்ட போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங், காந்தி, புத்தரின் தேசத்தில், போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்களையும், சிறுவர்களையும் பாதிப்பதாக தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் உள்ள சர்வதேச தொடர்புகளை கண்டுபிடிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியை நாடியுள்ளதாகவும், தற்போதைய நிலையில் ஜாமீன் தரக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, ஜாமீன் மனு மீதான உத்தரவு வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Comments