அதிக பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வது நினைவாற்றலைப் பாதிக்கும், உணவை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி
அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வது நினைவாற்றலைப் பாதிக்கும் என்பது எலிகள் மீது நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் ஓகியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 3 மாதம் மற்றும் 24 மாதம் வயதுகளையுடைய எலிகளுக்குப் பதப்படுத்தப்பட்ட உணவைக் கொடுத்து அவற்றின் நினைவாற்றல் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளனர்.
அதில் வயதான எலிகளுக்கு நினைவாற்றல் குறைந்திருந்ததும், இளம் எலிகளுக்கு நினைவாற்றல் பாதிக்கப்படாததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை உணவில் சேர்த்துக்கொண்டால் நினைவாற்றல் பாதிக்கப்படாததும் தெரியவந்துள்ளது. பதப்படுத்தும் பொருள் சேர்க்கப்பட்ட உருளைக்கிழங்குச் சீவல், மற்ற நொறுக்குத் தீனிகள், பஸ்தா, பிசா ஆகியன வயதானோரின் மூளைக்குப் பாதிப்பு ஏற்படுத்துபவை என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
Comments