சாமிக்கு பூஜை போட சென்ற கடை ஓனர்... சரக்கிற்கு சைடிஸ் இல்லை என மளிகைக் கடையை பதம் பார்த்த ஆசாமிகள்
கடலூரில் சரக்குக்கு ஷைடிஸ்காக, மளிகைக் கடையில் புகுந்து மிட்டாய், தின்பண்டங்களை திருடிச் சென்ற 4 பேர் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசில் சிக்கினர்.
குள்ளஞ்சாவடியைச் சேர்ந்த தயாளன் என்பவர் தனது வீட்டுக்கு முன்புறத்தில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை ஆயுதப்பூஜைக்கு சாமி கும்பிடுவதற்காக தயாளன் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த நேரம் பார்த்து பல்சர் பைக்கில் கடைக்கு வந்த 3 பேர், கடையில் ஆள் இல்லாததை அறிந்து, மிட்டாய், தின்பண்டங்கள், ஜூஸ் என கையில் கிடைத்தவற்றை எல்லாம் அள்ளிக் கொண்டனர்.
ஒருவன் வீட்டுக்குள் இருந்து ஆள் யாரும் வருகிறார்களா என நோட்டமிட்டு சொல்ல, சொல்ல மற்ற இருவரும் பொருட்களை திருடினர்.
திருடிய பொருட்களை எடுத்துக் கொண்டு இரண்டு பேர் பைக்கில் கிளம்பி விட்ட நிலையில், அங்கு இன்னொருவன் வந்தான். இதனையடுத்து, இரண்டு பேரும் வெகு நேரமாக கடையில் பொருட்கள் வாங்க காத்திருப்பது போல் நின்று பாவனைக் காட்டிவிட்டு அங்கிருந்து சென்றது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
Comments