கடுமையான நிதி நெருக்கடியில் ஆப்கானிஸ்தான் ; காப்பகங்களில் உள்ள குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி
ஆப்கானிஸ்தானில் நிதி நெருக்கடியால் ஆதரவற்றோர் இல்லங்களில் வாழும் சிறார்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
தாலிபான்கள் ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு, பிற நாடுகள் வழங்கும் பல லட்சம் டாலர் மதிப்பிலான நிதி உதவி நிறுத்தப்பட்டதுடன் ஏற்கனவே இருந்த நிதியும் காலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காப்பகங்ககளில் உள்ள குழந்தைகளை பராமரிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரும் குளிர் காலத்தில் நாட்டின் நிதி பிரச்சனை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள, ஆப்கன் மத்திய வங்கியின் 9 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை விடுவிக்க ஐ.நா,.வை தாலிபான்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Comments