கோவில்களிலும், துர்க்கை பூசைப் பந்தல்களிலும் தாக்குதல் நடத்தியவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவர் - வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா
கோவில்களிலும், துர்க்கை பூசைப் பந்தல்களிலும் தாக்குதல் நடத்தியவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவர் என வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்துள்ளார்.
வங்கதேசத்தில் நவராத்திரியையொட்டிக் கோவில்களிலும், துர்க்கை சிலை வைத்து அலங்கரிக்கப்பட்ட பந்தல்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சமூக ஊடகங்களில் வந்த வதந்தியை நம்பிக் குமிலா மற்றும் பல்வேறு இடங்களில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து வன்முறை மூண்டதில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். வாகனங்களும் பொதுச்சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன. இந்நிலையில் பிரதமர் ஷேக் ஹசீனா விடுத்துள்ள அறிக்கையில், தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றமிழைத்தோர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்றாலும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Comments