பிரிட்டன் மட்டுமல்லாமல் 30 மேற்பட்ட நாடுகள் இந்தியாவின் தடுப்பூசிச் சான்றிதழை ஏற்க ஒப்புதல்
இந்தியாவின் கொரோனா தடுப்பூசிச் சான்றிதழை பிரிட்டன் மட்டுமல்லாமல் முப்பதுக்கு மேற்பட்ட நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
கல்வி, வணிகம், சுற்றுலா உள்ளிட்டவற்றுக்காகப் பிற நாடுகளுக்குச் செல்வோர் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருப்பதைப் பெரும்பாலான நாடுகள் கட்டாயமாக்கியுள்ளன.
கோவிஷீல்டு அல்லது அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் இந்தியாவில் இருந்து வருவோருக்குக் கட்டாயத் தனிமைப்படுத்தல் கிடையாது என பிரிட்டன் அறிவித்துள்ளது.
இதேபோல பிரான்ஸ், ஜெர்மனி, நேபாளம், பெலாரஸ், லெபனான், ஆர்மீனியா, உக்ரைன், ஹங்கேரி, செர்பியா உள்ளிட்ட முப்பதுக்கு மேற்பட்ட நாடுகளும் இந்தியாவின் தடுப்பூசிச் சான்றிதழை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன.
Comments