விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த விவகாரம்.. சம்பவ இடத்திற்கு ஆசிஷ் மிஸ்ராவை அழைத்து சென்று விசாரணை..!

0 2434
சம்பவ இடத்துக்கு ஆசிஷ் மிஸ்ராவை அழைத்து சென்று குற்றம் நடந்தது எப்படி என்று விசாரணை..!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்புர் வன்முறையை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ள மத்திய இணை அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று காரை ஏற்றி விவசாயிகளைக் கொன்ற குற்றச் செயலை தத்ரூபமாக மீண்டும் நிகழ்த்திக் காட்டி வீடியோவாகப் பதிவு செய்துக் கொண்டனர்.

4 விவசாயிகள் ஒரு பத்திரிகையாளர் உள்பட 8 பேர் அந்த சம்பவத்தில் உயிரிழந்தனர்.விவசாயிகளின் டம்மி பொம்மைகள் வைக்கப்பட்டு கார் அவர்கள் மீது மோதிய காட்சியை அரங்கேற்றினர்.

ஆசிஷ் மிஸ்ராவின் மூன்று நாள் போலீஸ் காவல் முடிவுக்கு வந்ததையடுத்து நேற்றிரவு அவர் மீண்டும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments