வாகன ஓட்டுனர் உரிமம் உள்ளவற்றைப் புதுப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 31, இனி நீட்டிப்பு இல்லை - மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம்

0 4478

வாகன ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ் உள்ளிட்டவற்றை புதுப்பிக்க அளிக்கப்பட்டுள்ள அவகாசம், வரும் 31ம் தேதிக்குப் பின் நீட்டிக்கப்படாது என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

வாகன ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவற்றை புதுப்பிக்க கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் ஏழு முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி வரும் 31ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வாகன ஆவணங்களைப் புதுப்பிக்க, வரும் 31ம் தேதிக்குப் பின் அவகாசம் நீட்டிக்கப்படாது என்று தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments