உ.பி.விவகாரம்- சம்பவம் நடந்த இடத்திற்கு மத்திய அமைச்சரின் மகன் ஆசிஸ் மிஸ்ராவை அழைத்துச் சென்று போலீசார் நடிக்க வைத்து விசாரணை
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு, மத்திய இணை அமைச்சர் மகன் ஆசிஸ் மிஸ்ராவை அழைத்துச் சென்று சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நடிக்க வைத்து விசாரணை நடத்தினர்.
அக்டோபர் 3 ஆம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கான்வாயில் இருந்த கார்கள் மோதியதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மேலும் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் அஜஸ் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ரா உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஆசிஸ் மிஸ்ரா உள்பட 4 பேரை சம்பவம் நடந்த போது அவர்கள் என்ன செய்தனர் என்பதை விளக்குவதற்காக அங்கு அழைத்துச் சென்று போலீசார் நடிக்க வைத்தனர்.
மேலும் 3 எஸ்யூவி கார்களை பயன்படுத்தி விவசாயிகள் போன்று மாதிரியைப் பயன்படுத்தி அதன் மீது மோதவிட்டு வீடியோ பதிவு செய்தனர்.
Comments