பணியில் இருந்த போது, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு திடீரென நெஞ்சுவலி

0 6171

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாலையில் தனது அறையில் அலுவல் பணிகளை மேற்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருடைய பாதுகாவலர் ஓடிவந்து சக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த்தார். அதனைத் தொடர்ந்து, காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து அவரது காரிலேயே சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி அறிந்ததும், அவரது குடும்பத்தினரும் பிற காவல்துறை அதிகாரிகளும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவும் பிற அதிகாரிகளும் மருத்துவமனைக்கு நேரில் வந்து காவல் ஆணையர் சங்கர் ஜிவாலின் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments