தொட்டால் உதிரும் வகையில் தரமற்று கே.பி.பார்க் குடியிருப்பு கட்டப்பட்ட விவகாரம்-45 நாட்களில் மறுசீரமைக்க உத்தரவு

0 2852

சென்னை புளியந்தோப்பில் தொட்டால் உதிரும் வகையில் தரமற்று கட்டப்பட்டிருந்த கே.பி.பார்க் குடியிருப்புகளின் மறுசீரமைப்பு பணிகளை 45 நாட்களில் சரி செய்ய சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொட்டால் உதிரும் வகையில் கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் குறித்து ஆய்வு செய்த ஐ.ஐ.டி. குழு அளித்த 441 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுமான பூச்சு வேலைகள் மற்றும் உடைந்த தருவாயில் இருக்கும் கழிவறை பீங்கான்கள், கோப்பைகள் மற்றும் தண்ணீர் குழாய் சீரமைப்பு பணிகளை அடுத்த 45 நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டும் என கட்டுமான நிறுவனத்திற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments