வாஷிங்டனில் பருவநிலை மாற்ற பிரச்சனைக்கு நிதி ஒதுக்கக்கோரி நூதன போராட்டம்..!
அமெரிக்காவில் பருவநிலை மாற்ற பிரச்சனைக்கு நிதி ஒதுக்கக்கோரி சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தில் நூதன போராட்டம் நடத்தப்பட்டது.
Avaaz என்னும் சர்வதேச செயற்பாட்டாளர்கள் குழு நடத்திய இந்த போராட்டத்தில் உலகின் பணக்கார நாடுகள், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் கூறியபடி ஆண்டுக்கு 100 பில்லியன் அமெரிக்க டாலரை ஒதுக்க வலியுறுத்தினர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகிய தலைவர்களின் கட் அவுட்களை பிடித்தப்படி அவர்கள் கவனத்தை ஈர்த்தனர்.
Comments