பென்சீன் வேதிப்பொருள் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து தீ விபத்து

0 2751
பென்சீன் வேதிப்பொருள் ஏற்றி சென்ற டேங்கர் லார் கவிழ்ந்து தீ விபத்து

கர்நாடகத்தில் benzene என்னும் மிக எளிதில் தீப்பற்றக்கூடிய வேதிப்பொருளை எடுத்துச் சென்ற டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மங்களூரு சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துணை நிறுவனத்திற்கு சொந்தமான லாரி, குஜராத்தில் உள்ள ஒரு பெயின்ட் நிறுவனத்துக்கு benzene ஏற்றி சென்று கொண்டிருந்தது.

அப்போது உத்தர கன்னட மாவட்டத்தின் Arbail Ghat-Ankola-Yellapur நெடுஞ்சாலையில் லாரி விபத்துக்குள்ளானது. benzene கசிந்து தீ பரவியதால் சாலையை ஒட்டியுள்ள காடுகளில் தீ பற்றியது.

லாரி ஓட்டுனரும், கிளீனரும் வெளியே குதித்து தப்பித்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை .தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடிய நிலையில் , இந்த விபத்தால் அச்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments