தீபாவளியை முன்னிட்டு நவ. 1, 2, 3 ஆகிய நாட்களில் ரேசன் கடைகள் செயல்படும் - தமிழக அரசு..!
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1, 2, 3 ஆகிய மூன்று நாட்களும் நியாயவிலைக் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்களுக்கு இன்றியமையாப் பொருட்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நியாயவிலைக் கடைகளில் தீபாவளிக்கு முன்பே நவம்பர் மாதத்துக்கான இன்றியமையாப் பொருட்களை வழங்க உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி நவம்பர் 1, 2, 3 ஆகிய மூன்று நாட்களும் நியாயவிலைக் கடைகளைக் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து வைத்துப் பொதுமக்களுக்குப் பொருட்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான பொருட்களை நவம்பர் மாதத்துக்கு முன்னதாகவே நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
Comments