வனத்துறையிடம் சிக்காமல் போக்கு காட்டி வரும் T23 புலி... போஸ்பரா வனப்பகுதியில் பிடிக்கும் பணி தீவிரம்!
நீலகிரி மாவட்டம் மசினகுடி சிங்காரா வனப்பகுதியில் தேடப்பட்டு வந்த T23 புலி, போஸ்பரா வனப்பகுதியில் சுற்றுவருவதால் அதனை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். T23 புலி கடந்த திங்கட்கிழமை முதல் போஸ்பரா வனப்பகுதியில் நடமாடி வந்தது வனத்துறை பொருத்தியிருந்த தானியங்கி கேமராவில் பதிவானது.
அதன் அடிப்படையில், புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் எனவும் கால்நடைகளை மேய்க்க செல்ல வேண்டாம் எனவும் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. முதுமலை வன பகுதிக்கு உட்பட்ட முதுகுளி, நாகம்பள்ளி கிராம மக்களும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments