புனரமைப்பு பணியின் போது கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள்
நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரில் புனரமைப்பு பணியின் போது ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட தேவபூரீஸ்வரர் ஆலயத்தில் சிலை கடத்தல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கோவில் வளாகத்தில் புதிய நவக்கிரக மண்டபம் அமைக்க குழி தோண்டிய போது 18 ஐம்பொன் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் திருச்சி மற்றும் கும்பகோண சிலை தடுப்பு போலீசார் ஆய்வு செய்தனர். கோவில் ரெக்கார்டுகள் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
Comments