ஐ.பி.எல். கிரிக்கெட் - டெல்லி அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

0 3191
ஐ.பி.எல். கிரிக்கெட் - டெல்லி அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, கொல்கத்தா இறுதி போட்டிக்கு முன்னேறியது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழந்து 135 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 36 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான சுப்மான் கில் 46 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 55 ரன்களும் எடுத்தனர்.கடைசி ஓவரில் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய போதும், திரிபாதி சிக்சர் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

துபாயில் நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் சென்னை, கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments