காளான் சாப்பிடுபவர்களுக்கு மனச்சோர்வு குறைவதாக ஆய்வில் தகவல்
உணவில் காளானைச் சேர்த்தால் மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வு குறையும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பென் ஸ்டேட் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 24 ஆயிரம் இளைஞர்களிடம் உணவு முறை குறித்து ஆய்வு நடத்தினர்.
அப்போது காளானில் எர்கோதியோனைன் என்ற அமினோ அமிலம் மனச்சோர்வைக் குறைக்கும் தன்மை கொண்டது என்பதைக் கண்டுபிடித்தனர்.
ஆனால் காளான் சாப்பிடாதவர்களிடம் மன அழுத்தம் இருப்பதையும் பென் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
Comments