நீரின்றி காய்ந்த 92 தென்னை மரங்கள், வேரோடு பெயர்த்து இடமாற்றம் செய்த விவசாயி
கோவை தொண்டாமுத்தூர் அருகே விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் நீரின்றி காய்ந்த 92 தென்னை மரங்களை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு பெயர்த்தெடுத்து, வேறு தோட்டத்துக்கு மாற்றி நடவு செய்துள்ளார்.
ஓணப்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன் என்பவர் தன்னுடைய தோட்டத்தில் 90க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வளர்த்து வந்தார். தென்னை மரங்கள் நன்கு வளர்ந்துவிட்ட நிலையில், அண்மைக்காலமாக அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் முற்றாகக் குறைந்து மரங்கள் காய்ந்துபோகத் தொடங்கியுள்ளன.
குழந்தைபோல வளர்த்த மரங்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என எண்ணிய ஈஸ்வரன், நீர்வளம் மிகுந்த தன்னுடைய மற்றொரு தோட்டத்துக்கு அவற்றை இடமாற்றம் செய்ய முடிவெடுத்தார்.
அதன்படி கோவை சுல்தான் பேட்டையை சேர்ந்த கனகராஜ் என்பவர் மூலம் 92 தென்னை மரங்களையும் ஜேசிபி இயந்திரம் கொண்டு பெயர்த்தெடுத்து, லாரி மூலம் கொண்டு சென்று மற்றொரு தோட்டத்தில் நட்டு வைத்தனர்.
Comments