தந்தையின் சூதாட்டத் தொழிலை அவரது இறப்புக்குப் பின் கையிலெடுத்த மகன், பல லட்ச ரூபாய் மோசடி.! போலீசார் கைது

0 2562

சென்னையில் அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி தந்தையின் கிரிக்கெட் ஆன்லைன் சூதாட்டத் தொழிலை கையில் எடுத்து, லட்சக்கணக்கில் மோசடி செய்த பொறியியல் பட்டதாரியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சூளைமேட்டைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் ஆன்லைன் “பெட்டிங்”கில் 87 லட்ச ரூபாயை இழந்துவிட்டதாக மத்திய குற்றப்பிரிவில் புகாரளித்தார். சைபர்கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், கீழ்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவன் சிக்கினான்.

கிரிக்கெட் போட்டி, குதிரை பந்தயம் உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மீது ஆன்லைன் சூதாட்டம் நடத்தி வந்துள்ளான் ஹரிகிருஷ்ணன்.

அவனுடைய தந்தை  பல ஆண்டுகளாக போலீசிடம் சிக்காமல் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுவந்ததும் அவர் இறந்ததும் அதே பாணியை கையில் எடுத்து ஹரிகிருஷ்ணன் சூதாட்டத்தில் ஈடுபட்டதும், போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments