மின்வாரிய வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி

0 1754

சென்னையில் மின்வாரிய வேலை வாங்கித் தருவதாகக் கூறி 18 லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அதிகாரி பணம் வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகும் நிலையில், அவரிடம் 82 லட்ச ரூபாய் கொடுத்து ஏமாந்ததாக மற்றொருவர் புகாரளித்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு அப்போதைய வடசென்னை மின்வாரிய உதவி செயற்பொறியாளராக இருந்த பாபு என்பவர், எண்ணூரைச் சேர்ந்த ஜெகன் என்பவருக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 18 லட்ச ரூபாயை வாங்கினார் என்று கூறப்படுகிறது.

ஆனால் சொன்னப்டி வேலை வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பித் தராமல் மிரட்டல் விடுப்பதாக அவர் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜெகனிடம் பாபு பணம் வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது,

இதனிடையே தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் பாபுவிடம் 82 லட்ச ரூபாய் கொடுத்து ஏமாந்துவிட்டதாகக் கூறி அவரது வீட்டு வாசல் முன்பு தாயாருடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments