மின்சார வாகன உற்பத்தியில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.15,000 கோடி முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்
மின்சார வாகனங்களின் உற்பத்திக்காக அடுத்த 5 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில், சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
டிபிஜி என்ற தனியார் முதலீட்டு நிறுவனம் மற்றும் அபுதாபியை சேர்ந்த ஏடிகியூ ஆகிய நிறுவனங்களிடம் இருந்து 7500 கோடி ரூபாய் முதலீட்டை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெற்றுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மின்சார வாகன உற்பத்திக்காக தனி பிரிவு செயல்படும் என்றும், புதிய மாடல் வாகனங்கள், எலக்ட்ரிக் பேட்டரி, சார்ஜிங் நிலைய கட்டமைப்புக்காக முதலீடு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments