கனமழை, பலமற்ற அஸ்திவாரத்தால் சரிந்து விழும் நிலையில் இருந்த 4 மாடி கட்டிடம் இடிப்பு

0 3020

பெங்களூரு கமலா நகரில் சரிந்து விழும் நிலையில் இருந்த 4 மாடி கட்டிடம் இடிக்கப்பட்டது. இடிக்க வேண்டிய நிலையில் இருக்கும் 26 கட்டிடங்களில் இதுவும் ஒன்றாக அடையாளம் காணப்பட்டிருந்தது.

இதையடுத்து அங்கு வசித்து வந்த 2 குடும்பத்தினர் ஏற்கனவே வெளியேறி விட்டனர். இந்த நிலையில் கனமழை காரணமாக நேற்று அந்த கட்டிடம் சாய்ந்தால் எஞ்சிய 6 குடும்பத்தினரும், தேவையான முக்கிய பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேறினர்.

அருகில் வசித்தவர்களும் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் கட்டிடத்தை முன்னெச்சரிக்கையுடன் இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அஸ்திவாரம் பலமின்றி அமைக்கப்பட்டதும் கட்டிடம் சாய்ந்ததற்கு ஒரு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கஸ்தூரி நகரில் கடந்த வியாழக்கிழமை 3 அடுக்கு கட்டிடம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments