தரமின்றி ஜவ்வரிசி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - உயர்நீதிமன்றம்
உரிய தரமின்றி ஜவ்வரிசி விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கடைகளில் விற்கப்படும் மூன்று ஜவ்வரிசி மாதிரிகளை வரவழைத்து, அவற்றை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்புத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மூன்று மாதிரிகளை ஆய்வு செய்து அளிக்கப்பட்ட அறிக்கையில், இரு மாதிரிகள் தரமானதாக இருப்பதாகவும், ஒரே ஒரு மாதிரி மட்டும் சற்று வித்தியாசம் உள்ளதாகவும், அதுவும் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
மேலும், தரமின்றி உணவுப் பொருட்கள் விற்பனை செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
Comments