"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
மகாத்மா காந்தியின் ஆலோசனைப் படியே வீரசாவர்க்கர் கருணை மனு அளித்தார் - ராஜ்நாத் சிங்
மகாத்மா காந்தியின் ஆலோசனைப்படியே பிரிட்டிஷ் அரசிடம் வீர சாவர்க்கர் கருணை மனு அளித்ததாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ராஜ்நாத் சிங், அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீர சாவர்க்கரை விடுதலை செய்ய வேண்டும் என பிரிட்டிஷ் அரசிடம் மகாத்மா காந்தி வலியுறுத்தி வந்ததாகத் தெரிவித்தார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் தன்னை விடுவிக்கும்படி அரசுக்குக் கருணை மனு அனுப்ப உரிமை உள்ளதாகவும், அதன்படியே மகாத்மா காந்தியின் ஆலோசனைப்படி வீரசாவர்க்கர் கருணை மனு அளித்ததாகத் தெரிவித்தார். விடுதலைப் போராட்டத்தில் சாவர்க்கரின் பங்களிப்பைச் சிலர் தவறாகச் சித்தரிப்பதாகவும், அதை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
Comments