கொரோனாவால் 10 கோடி மக்கள் வறுமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் - ஐநா சபை பொதுச் செயலாளர்
கொரோனா பெருந்தொற்று உலகில் 10 கோடி மக்களை வறுமையில் தள்ளி விட்டதாக ஐக்கிய நாடுகள் சபையில் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், உலகளாவிய ஒற்றுமை என்பது நாடுகளிடையே செயலில் காணப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
மோதல் உள்ள நாடுகள் மற்றும் பலவீனமான மண்டலங்களில் வசிக்கும் மக்கள் மோசமாக பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், வளர்ந்த நாடுகள் தடுப்பூசியைப் பெற்றிருந்தாலும் ஏழை நாடுகளுக்கு தேவையான தடுப்பூசி வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
Comments