ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க. முன்னிலை..!

0 5383

கட்சிகள் மாவட்ட கவுன்சிலர் ஒன்றிய கவுன்சிலர்
திமுக + 138 1021
அதிமுக + 02 215
 மற்றவை  00 144

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற 9 மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவிகளையும் திமுகவே கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. 

9 மாவட்டங்களில் மொத்தமுள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் 138 இடங்களில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு இடங்களில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களில் மொத்த மாவட்ட கவுன்சிலர் பதவிகளையும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தங்கள் வசமாக்கியுள்ளன.

எஞ்சிய செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் தலா ஒரு இடத்தில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில், தேர்தல் நடந்த 9 மாவட்டங்களுக்கான மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவியையும் திமுகவே கைப்பற்றுகிறது.

அதேபோன்று, ஒன்றிய கவுன்சிலருக்கான பதவியிடங்களில் மொத்தமுள்ள 74 ஒன்றியங்களில் 73 ஒன்றியங்களை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கைப்பற்றியுள்ளன. காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள மொத்த ஒன்றிய கவுன்சிலர் பதவிகளையும் திமுக கூட்டணி வென்றுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் திமுக வெற்றி வாகை சூடியுள்ள நிலையில், திருப்போரூர் ஒன்றியத்தில் மட்டும் இழுபறி நீடிக்கிறது. இதுவரை வெளியான முடிவுகளின் படி மொத்தம் உள்ள 1381 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை வென்றுள்ளன.

அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு 200க்கும் மேற்பட்ட ஒன்றிய வார்டுகள் மட்டுமே கிடைத்தன. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமக, 47 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை வென்று மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

அமமுக நான்கு இடங்களையும், தேமுதிக ஒரு இடத்தையும் வென்ற நிலையில், நாம் தமிழர் கட்சி ஒரு ஒன்றிய கவுன்சிலர் இடத்தில் கூட வெல்லவில்லை.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments