பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை
பவானி ஆற்றில் அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்பட உள்ளதால் கரையோர கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணையில் தற்போதைய நிலவரப்படி நீர்மட்டம் 102 அடியாக உள்ளது. கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுவதால் பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் நீரின் அளவு 6500 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் இரவு பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் அதிகப்படியான உபரிநீர் திறக்கப்பட உள்ளதால் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
Comments